×

செக்‌ஷுவல் உறுப்பு கால்களுக்கு இடையில் இல்லை: கமல்ஹாசனின் அதிரடி பேட்டி

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
 

இந்த காதலர் தினத்தை காதலர்கள் ஒருபக்கம் காதலர்கள் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காதலர் தினத்திற்கு ஒரு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் எதையும் வித்தியாசமாக வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் காதலர் தினம் குறித்தும் காதல் குறித்தும் இன்றைய இளைஞர்கள் காதலை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

‘செக்‌ஷுவல் உறுப்பு என்பது காலுக்கு இடையில் இருப்பதாகச் சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது இரு காதுகளுக்கு இடையில் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். உடல்தாண்டியது காதல் என்பதை இந்தத் தலைமுறை வெகுசீக்கிரத்தில் புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். அதற்கான சாத்தியங்கள் இப்போது நிறையவே இருக்கின்றன’ என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பெரும்பாலான இளைஞர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News