×

தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன் – அதிர்ச்சி சம்பவம்!

பீஹார் மாநிலத்தில் தோசை சாப்பிட சொல்லி வற்புறுத்திய அம்மாவை மகனே சுட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பீஹார் மாநிலத்தில் தோசை சாப்பிட சொல்லி வற்புறுத்திய அம்மாவை மகனே சுட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மஞ்சுதேவி என்பவருக்கு 20 வயதில் யாதவ் என்ற மகன் இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு யாதவ் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு நண்பர்களிடம் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு தோசை சுட்டு எடுத்து வந்த கொடுத்த அவரது அம்மா ஆறுவதற்குள் சூடாக தோசையை சாப்பிட சொல்லியுள்ளார்.

ஆனால் யாதவ்வோ போனில் கவனமாகப் பேசிக்கொண்டு இருக்க, தோசையை கீழே வைத்துவிட்டு மீண்டும் பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் மீண்டும் மீண்டும் தோசையை சாப்பிட சொல்லி அவரது அம்மா வற்புறுத்தவே எரிச்சலான யாதவ் இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அம்மா என்றும் பார்க்காமல் சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மஞ்சு தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீஸார் யாதவிடம் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News