Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சொல்லுங்க! பாம்பாலே என்ன பன்னிட்டு இருந்தீங்க!…நடிகர் வாழ்வில் இவ்வளவு சோகமா?….

சொல்லுங்க! பாம்பாலே என்ன பன்னிட்டு இருந்தீங்க!…நடிகர் வாழ்வில் இவ்வளவு சோகமா?….

462cb81a58028b8da81c55ef7bc32bf2

பாட்சா படத்தில் ரஜினி தான் ஹீரோ. அது நமக்கு தெரியும். ஆனா அதுல நடிச்ச எல்லோருமே ஹீரோ தான்னு தெரியுமா? விஜயகுமார், ரகுவரன், ஆனந்தராஜ், தேவன், சரண்ராஜ் எல்லோருமே ஹீரோக்கள். இவ்வளவு ஏன் இந்த ஜனகராஜ் கூட ‘கல்யாண காலம்’ படத்தில் ஹீரோ தான்.இவங்க கூட வேற ஹீரோவும் இருந்தாரு. 

“சொல்லுங்க…சொல்லுங்க…பாம்பேல என்ன பண்ணிட்டிருந்தீங்க?…” 

பாட்சா மூலமா தென்னிந்தியா முழுக்க அறியப்பட்ட ரஜினி தம்பியா நடிச்ச கன்னட ஹீரோ சசிகுமார். அவரின் கதை நம்மை கலங்க வைக்கும்…

d1a7f53a2bdbfb84bb0e0497c1fd7956

சசிகுமார் ராஜ்குமார் மகனோடு 89ல் அறிமுகமானாலும் கன்னட பருவராகம் ரவிச்சந்திரனோட ‘யுத்தகாண்டா’ படத்தால் அறியப்பட்டார். யுத்தகாண்டா நம்ம டி.ஆரோட ‘ஒரு தாயின் சபதம்’ படத்தோட கன்னட ரீமேக். அதில் பப்லு நடிச்ச வில்லன் ரோலில் சசிகுமார் நடித்தார். தொடர்ந்து ஹிந்தி Chaalbaaz கன்னட ரீமேக்கில் அம்பரீஷோடு நடிக்க பாப்புலரானார் சசி. தொடர்ந்து மாலாஸ்ரீயோடு நாயகனாக நடிக்க கதாநாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து தாரா, சுதாராணி, சௌந்தர்யாவோடு நடித்து பல ஹிட்கள் கொடுத்தார். 

1991ல் தமிழில் எஸ்.வி.சேகர் நடித்த ‘வீட்ல எலி வெளியில புலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ப்ரேக் டான்ஸ் ஆடிவிட்டு செல்வார். 1995ல் பாட்சா என்கிற மெகா ஹிட். அதில் ரஜினியின் தம்பியாக நடித்து தென்னிந்தியா முழுக்க பிரபலமானார்.

2ac78fb16f71eab68be747bf596b7e71

90களின் மத்தியில் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் நடந்த கார் விபத்தில் அவர் முகத்தில் பலமாக அடிபட்டது. அதோடு அவர் முகம் பாழாகி போனது. பலகட்ட சர்ஜரிகளுக்கு பிறகு அவர் புதிய முகத்தை அவரே காண பயப்பட்டார். வெளியே வரவே பயந்து வீட்டினுள்ளேயே முடங்கினார். நண்பர்கள் யாருமே அவரை பார்க்க வர வில்லை. கடைசியாக ஒரு தயாரிப்பாளர் அவரை நடிக்க வைத்தார். ஆனால் பூஜை அன்று ஷூட்டிங்கிலேயே அவரது புதிய முகத்தில் எக்ஸ்பிரஷன்கள் வரவில்லை. பலரும் இயக்குனரை சமாதானப்படுத்த அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படங்களில் சிறிய வாய்ப்புகளே வந்தன.

8cb62d561866443826390c7f76938163

உடனே திரையுலகில் சரிவராது என அரசியலுக்கு பார்வையை திருப்பினார் சசி.  2004ல் ஜனதா தள் கட்சியில் சேர்ந்தார். 2006ல் காங்கிரஸில் சேர்ந்து சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இப்போதும் அரசியலில் முழுநேரமும் நின்று கலக்கிக்கொண்டிருக்கிறார். மனைவி சரஸ்வதி. இரண்டு குழந்தைகள். மகன் அக்ஷித் ஹீரோவாக திரையுலகில் நுழைந்திருக்கிறார். இவரது முதல் படம் ‘சீதாயனா’ ஆகஸ்ட் 26ல் ரிலீசாக இருக்கிறது.

பாட்சா படத்தில் ரஜினியை ‘பாம்பேல என்ன பண்ணிட்டிருந்தீங்க?’ என கேட்டது போல இவர் வாழ்வும் பாட்சா படம் மாதிரியே விபத்துக்கு முன்பு பாட்சாவாகவும், விபத்துக்குப்பின் மாணிக்கமாகவும் இரண்டாக மாறியது துரதிர்ஷ்டம்.

வாழ்க்கை விசித்திரமானது!…

– முகநூலில் இருந்து செல்வன் அன்பு
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top