×

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் வீழ்ந்த கதை!

ஜெண்டில் மேன் படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் ஜெண்டில் மேன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

ஜெண்டில் மேன் படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் ஜெண்டில் மேன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூரியன், ஜெண்டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட ஏராளமான பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து பிரம்மாண்ட தயாரிப்பாளர் எனப் பெயரெடுத்தவர் கே டி குஞ்சுமோன். புதுமுக இயக்குனர்கள் என்று கூட பார்க்கமால ஜெண்டில்மேன் மற்றும் ரட்சகன் ஆகிய படங்களுக்காக பணத்தை வாரி இரைத்து செலவு செய்தவர் குஞ்சுமோன்.

ஆனால் அவற்றில் சூரியன், ஜெண்டில் மேன் மற்றும் காதலன் ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன.  ரட்சகன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த கோடீஸ்வரன் என்ற பெயரில் இமாலய பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கி, அது பாதியிலேயே நின்றதால் மிகப்பெரிய இழப்புக்கு ஆளானார். இதனால் மீள முடியாத கடனுக்கு ஆளானார். இதனால் அவரால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக படத் தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை.

இதனால் நீண்டகாலமாக படத்தயாரிப்புகளில் ஈடுபடாத அவர் , தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போதுஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்  மூலமாக தயாரிக்க உள்ளார். ஆனால் இந்த படத்தை இயக்குவது ஷங்கர் அல்ல என்றும் அர்ஜுனும் இந்த படத்தில் எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News