×

இணையத்தில் லீக்கான மாஸ்டர் படத்தின் கதை? படக்குழுவினர் அதிர்ச்சி!

விஜய் மற்றும் பலர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் கதை இணையத்தில் வெளியாகியுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

 

விஜய் மற்றும் பலர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் கதை இணையத்தில் வெளியாகியுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

விஜய், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 5 மாதங்களுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளது. எப்படியும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தின் கதை இதுதான் என சொல்லி இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த செய்தியின் படி ‘கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் விஜய் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ளார்.  அவரை அங்கு பணிபுரியும் பேராசிரியரான மாளவிகா மோகனன் காதலிக்கிறார். மாணவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையால் விஜய்க்கு வேலை பறிபோகிறது. அதனால் அனாதை இல்லம் ஒன்றில் வார்டனாக சேர்கிறார். அங்கு இருக்கும் சில குழந்தைகள் போதைப் பொருளுக்கு அடிமையாக, அவர்களுக்கு போதை பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த அர்ஜுன் தாஸை கண்டுபிடிக்கிறார். அவர் மூலமாக மெயின் வில்லனான விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்து அந்த கும்பலையே  அழிக்கிறார் விஜய்.’ என அதில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இது உண்மையில்லை என்றும் இதுவரை வெளியான ப்ரமொஷன் போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் படத்தைப் பற்றிய தகவல்களைக் கொண்டு ரசிகர்களே உருவாக்கி சொல்லியுள்ள கதை என்றும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News