இதென்னப்பா? கதையை சொல்லிட்டாரு.. ‘வா வாத்தியாரே’ படம் இப்படித்தான் இருக்கப்போது
தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம அறிமுகமான கார்த்தி முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார். அதுவரை சூர்யா டாப்பில் இருந்தவர் பருத்திவீரன் படத்திற்கு பிறகு இதென்னப்பா அண்ணனை விட தம்பி நல்லா நடிக்கிறாரே என இயக்குனர்களின் பார்வை கார்த்தி மீது திரும்பியது. அதற்கேற்ப புது புது இயக்குனர்களுக்கு கார்த்தி வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.
தொடர்ந்து பல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த கார்த்தி இயக்குனராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டிருக்கிறார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். ஆயுத எழுத்து படத்தில் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணிபுரிந்தார் கார்த்தி. நடிகராக மட்டுமில்லாமல் நல்ல பாடவும் செய்வார். இவருடைய படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.
இதையும் படிங்க: நாளைக்கு 10 படங்கள் ரிலீஸ்!.. வசூலை அள்ளுமா அகாண்டா 2?….
அடிப்படையில் ஒரு நல்ல ஹியுமரான நடிகரும் கூட கார்த்தி. அது படத்திற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான படம் மெய்யழகன். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்தப்படியாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக புரடக்ஷனில் இருந்து வருகிறது.
வா வாத்தியாரே என பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் அப்டேட் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. படத்தின் போஸ்டர் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருந்தது. போலீஸ் கெட்டப்பில் கார்த்தி இந்தப் படத்தில் வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் படத்தின் இயக்குனரான நலன் குமாரசாமி படத்தின் கதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதாவது 80 மற்றும் 90களில் நாம் பார்த்த ஆக்ஷன்மசாலா படம் போல்தான் வா வாத்தியாரே படத்தின் கதையும். இந்தப் படம் எம்ஜிஆர் ரசிகரை பற்றியது. எம்ஜிஆர் ரசிகர் என்றால் அந்த கேரக்டர் கண்டிப்பாக ஒரு வயது முதிர்ந்தவராகத்தான் இருப்பார். அவருக்கு ஒரு பேரன். தன் பேரனுக்கும் எம்ஜிஆருக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாக அந்த தாத்தா கருதுகிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கு இவரால்தான் ஆபத்து? அப்பவே கணித்து சொன்ன எஸ்.ஏ.சி.. நடந்துடுச்சே
பேரனின் பெயர் ராமு. அவன் வளர்ந்து வேடிக்கையான மற்றும் எளிமையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறான். தனக்கென ஒரு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்கிறான். அதன் பிறகு எதிர்பாராத சில விஷயங்கள் தன் தாத்தாவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. அதன் பிறகு ராமு என்னவாக மாறுகிறான் என்பதுதான் கதை என நலன் குமாரசாமி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கதை என்னமோ பழைய கேட்ட கதை மாதிரி இருந்தாலும் கார்த்தியின் பிரசன்ஸ் அந்த கதைக்கு இன்னும் பக்கபலமாக இருக்கும் என தெரிகிறது. படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக்கு ஜோடியான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
