தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் எச். வினோத் அவர்கள் இயக்கத்திலும், போனிகபூர் அவர்கள் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக கடந்த மூன்று வருடங்களாக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த படம் பொங்கலன்று வெளியாகும் என அண்மையில் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த அஜீத்தின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும் விதமாக இந்த வலிமை படம் பொங்கலன்று திரையரங்கில் வெளியிடப்படாது என படக்குழுவினர்தெரிவித்தனர். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகள் 50 சதவீத இருக்கையின் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தான் நடிகர் அஜித் அவர்களின் வலிமை படம் பொங்கல் அன்று வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, விதார்த் நடித்துள்ள கார்பன், சதீஷ் நடித்துள்ள நாய் சேகர், அஸ்வினின் அறிமுகப்படமாகிய என்ன சொல்லப் போகிறாய், நடிகை லட்சுமி மேனனின் ஏஜிபி, விக்னேஷ் நடித்துள்ள பாசகார பையா மற்றும் ராதிகா நடித்துள்ள மருத ஆகிய ஏழு சிறு பட்ஜெட் படங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…