×

இளைஞரின் ஆசை வார்த்தையில் மயங்கி வீட்டை விட்டு ஓடிய மாணவி… கடைசியில் நடந்த விபரீதம்!

சென்னையில் பள்ளி மாணவியோடு காதலில் ஈடுபட்ட இளைஞர் அவரைக் கடத்திச் சென்றுள்ளார்.

 

சென்னையில் பள்ளி மாணவியோடு காதலில் ஈடுபட்ட இளைஞர் அவரைக் கடத்திச் சென்றுள்ளார்.

சென்னை ஆவடியில் உள்ள ராம்நகரில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த  பள்ளி மாணவி. இவர் கடந்த 30 ஆம் தேதி திடிரென காணாமல் போயுள்ளார். இது சம்மந்தமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் விசாரித்துள்ளனர் அவரது பெற்றோர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமி தனது ஏரியாவைச் சேர்ந்த விக்ரம் என்ற இளைஞரோடு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. போலிஸார் அவர்களை தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு அருகே சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

விசாரணையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி விக்ரம் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மைனர் பெண்ணைக் கடத்தியதாக அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News