மொட்டை மாடி ஸ்டூடியோ... லாக்டவுனிலும் கேப் விடாமல் போட்டோ ஷூட் நடத்தும் சித்ரா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
ரசிகர்களை திருதிப்படுத்த அவரும் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பிங்க் கலர் சுடிதார் அணிந்து வீட்டின் மொட்டை மடியில் போட்டோ ஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சித்ரா எப்போதும் கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் குடும்ப பெண் போல் இருப்பது தான் அவரது ரசிகர்களை இந்த அளவிற்கு ரசிக்க வைக்கிறது.