×

வீட்டுக்கு வந்த திருடன்… வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தைப் பார்த்த செய்த செயல்!

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி வீட்டுக்கு வந்த திருடன் அது அவர் வீடு எனத் தெரிந்ததும் திருடாமலேயே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

 

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி வீட்டுக்கு வந்த திருடன் அது அவர் வீடு எனத் தெரிந்ததும் திருடாமலேயே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

விஜய் டிவியின் கலக்கப்போவது யார் புகழ் வடிவேல் பாலாஜி கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்த அவர் பணியாற்றிய விஜய் தொலைக்காட்சி இப்போது அவருக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது.

அதில் கலந்துகொண்ட வடிவேல் பாலாஜியின் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் உடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடிவேல் பாலாஜியின் நண்பர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ‘ஒருமுறை வடிவேல் பாலாஜி வீட்டுக்கு ஒருவர் திருட வந்துள்ளார். எல்லாப் பொருள்களையும் திருடிவிட்டு கிளம்பும்போது அங்கிருந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு அது அவர் வீடு எனத் தெரிந்துகொண்டுள்ளார். அதனால் எல்லா பொருட்களையும் அங்கேயே வைத்து ‘இது உங்கள் வீடு எனத் தெரியாமல் திருட வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்’ எனக் கூறியதைக் கேட்டதும் அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.

வீட்டுக்கு வந்த திருடனே மனம் மாறி பொருட்களை வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்றால் அதுதான் வடிவேல் பாலாஜியின் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News