JSJ01: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் டைட்டில் அப்டேட்!.. போஸ்டரே ஹைப் ஏத்துதே!...
ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் சிறுவனாக வந்து அவருடன் நடனமாடி இருப்பார். சென்னையில் படித்த ஜேசன் சஞ்சய் தற்போது அம்மா சங்கீதாவுடன் லண்டனில் வசித்து வருகிறார். சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் அங்கு லண்டனில் ஃபிலிம் மேக்கிங் தொடர்பான சில படிப்புகளையும் படித்தார்.
ஜேசன் சஞ்சனை தங்கள் படங்களில் ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்க்குனர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவருக்கு ஆர்வம் இல்லை. ஆனால் கண்டிப்பாக அவர் சினிமாவில் நடிப்பார் என விஜய் ரசிகர்களுக்கு எதிர்பார்த்தார்கள். ஏனெனில் பார்ப்பதற்கு அப்படியே அப்பா விஜய் போலவே இருக்கிறார் ஜெசன்.
ஆனால் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி அவர்களை ஆச்சரியப்படுத்தியது. ஜேசன் யாரிடமும் உதவி இயக்குனராக கூட வேலை செய்ததில்லை. நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை இயக்கிய அனுபவத்தைக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கம் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் இயக்கம் படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். எனவே, படம் தமிழ்,தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதோடு ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஹீரோவான சந்தீப் கிஷன் கையில் அமெரிக்கன் டாலர் இருப்பது போலவும் அதுபற்றி எரிவது போலவும் டிசைன் செய்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
