×

பட்ட பகலில் நடிகைக்கு நடந்த சோக சம்பவம்!

தமிழில் அன்பே ஆருயிரே, லி, மருதமலை, காளை, ஜெகன்மோகினி, இசை, கில்லாடி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா சோப்ரா. கொரோனா காரணமாக தற்போது வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் அவர் டெல்லி போலீஸ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை டேக் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் "எனது தந்தை அங்கிருக்கும் போலீஸ்காலனி வழியாக நடந்து சென்ற போது, பைக்கில் வந்த 2 நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, அவரது செல்போனை பறித்து சென்றனர். பட்டபகலில் போலீஸ் இருக்கும் இடத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகும் டெல்லி பாதுகாப்பானது என்று கூறுவீர்களா?" என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News