Categories: Cinema News latest news Trailer

தரமான ரொமான்டிக் திரில்லர் ரெடி.. காடும் காட்டில் நடக்கும் காதலும்.. தண்டகாரண்யம் டிரெய்லர் ரிலீஸ்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் கெத்து தினேஷ் கலையரசன், ரித்விகா போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் தண்டகாரண்யம் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞ்சித்தின் படங்கள் என்றாலே புரட்சிதான். ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், வலிகளும் அவர்கள் அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்ற அனுபவத்தை தன்னுடைய படத்தின் மூலம் பிரதிபலிப்பார். மேலும் தன்னுடைய படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துகளையும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வையும் கூறிக்கொண்டு வருகிறார்.

தன்னுடை நீலம் ப்ரொடக்ஷன் மூலம் கமர்சியல் படங்களை எடுத்து பணம் பார்த்துவிட்டு செல்லாமல் தன்னுடைய படங்களைப் போல வரும் கதைகளை தைரியமாக தயாரித்து கமர்சியல் எலிமெண்டோடு தன்னுடைய அரசியலை சொல்கிறார்.

thandakaaranyam

இதனை தொடர்ந்து தற்போது தண்டகாரண்யம் திரைப்படத்தை எடுத்துள்ளார். தண்டி என்றால் காடு என்று பொருள்படும். இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. டிரைலரை பார்க்கும் பொழுது மலைவாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை விவரிக்கிறது. மேலும் இப்படம் காவல் அதிகாரிகள் மட்டும் காட்டில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இதன் கதைகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ரஞ்சித் படங்களில் பேசும் புரட்சி அவர் எடுத்திருக்கும் இந்த படத்திலும் பிரதிபலித்திருக்கிறது. அதிகார வர்க்கத்திற்கு எதிராக கேள்வி கேட்கும், புரட்சி தீ பரவுவது போல் ட்ரைலர் உணர்த்துகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சிறந்த ரொமான்டிக் திரில்லர் அனுபவத்தை பெற இந்த படத்தை தவறாமல் தியேட்டரில் கண்டு களிக்கலாம்.

SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
SATHISH G