×

அஜித் படத்தை காப்பாற்றிய மூவர் அணி: ஒரு ஆச்சரிய தகவல் 

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இந்த படத்திற்கு ஒரு தீராத சிக்கல் திடீரென எழுந்ததாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது
 

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இந்த படத்திற்கு ஒரு தீராத சிக்கல் திடீரென எழுந்ததாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தை ஜீடிவி நிறுவனத்துடன் இணைந்து போனிகபூர் தயாரித்து வந்த நிலையில் திடீரென ஜீடிவி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது 

இதனை அடுத்து வேறு சில நிறுவனங்களுடன் போனிகபூர் பேசி வந்தாலும் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் வேறு வழியின்றி போனிகபூர், ‘வலிமை’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மூன்று முக்கிய விநியோகஸ்தர்களிடம் ரூபாய் 60 கோடிக்கு பேசி, அதில் 30 கோடியை அட்வான்ஸாக பெற்றுள்ளாராம். இந்த பணத்தை வைத்து அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது

மொத்தத்தில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தடங்கல் இல்லாமல் நடக்க 3 விநியோகஸ்தர்களின் அணி உதவி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web

Trending Videos

Tamilnadu News