bhagyaraj
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்து, அவர் மூலம் நடிகனாகி, பின்னர் இயக்குனராக மாறியவர். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன்பு தியேட்டர்களில் மேட்னி ஷோ மிகவும் பிரபலம். பெண்கள் அதிகமாக மேட்னி ஷோ செல்வது பாக்கியராஜ் படங்களுக்குதான்.
munthanai
இவரின் படங்களில் டைட்டில் கார்டிலேயே ஒரு நெகிழ்ச்சியான காட்சியை வைப்பார் பாக்கியராஜ். இவர் எடுத்த முந்தானை முடிச்சி படத்தில் ஒரு கணவனுக்கு, மனைவி சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார். அந்த சாப்பாடை எடுத்து தான் சாப்பிடாமல் முதலில் மனைவிக்கு அந்த கணவர் ஊட்டிவிடுவார். அங்கிருந்துதான் இளையராஜா பாடும் ‘வெளக்கு வச்ச நேரத்துல’ பாடலுடன் டைட்டில் துவங்கும். இந்த காட்சி பாக்கியராஜுக்கு தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறது.
MN Nambiar
தூரல் நின்னு போச்சி படத்தை பாக்கியராஜ் இயக்கி கொண்டிருந்தார். அப்படத்தில் நம்பியார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அப்போது நம்பியாரின் மனைவி வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வருவாராம். அப்போது சாப்பிட உட்காரும்போது முதலில் மனைவிக்குதான் நம்பியார் ஊட்டிவிடுவாராம். இதைப்பார்த்த பாக்கியராஜ் நம்பியாரிடம் ‘இப்படி எல்லோர் முன்னிலையும் மனைவிக்கு ஊட்டிவிடுவது உங்களுக்கு கூச்சமாக இல்லையா?’ எனக்கேட்டாராம். அதற்கு எம்.ஜி.ஆர் ‘என் பொண்டாடிக்கு நான் ஊட்டி விடுகிறேன். இதில் எனக்கென்ன கூச்சம்’ என சொன்னாராம். இதை மனதில் வைத்துதான் முந்தானை முடிச்சி படத்தில் அந்த காட்சியை தான் வைத்ததாக பாக்கியராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இப்படி வாழ்க்கையிலிருந்து காட்சிகளை திரைக்கதையாக அமைத்ததால்தான் பாக்கியராஜ் படங்களை இப்போது வரை எல்லோரும் கொண்டாடிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூர்யாவை கலட்டிவிட்டு உலக நாயகனுடன் கைக்கோர்க்கும் வெற்றிமாறன்!… அப்போ வாடிவாசல் அவ்வளவுதானா?
Idli kadai:…
Vijay: கரூரில்…
Kantara 2…
நடிகர் தனுஷ்…
Kantara Chapter…