Categories: Cinema News latest news

ரசிகர்களை பங்கமாய் ஏமாற்றிய வணங்கான் படக்குழு… இப்படி செஞ்சிடீங்களே சூர்யா.?

நடிகர் சூர்யா – இயக்குனர் பாலா கூட்டணியில் வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இவர்களது கூட்டணிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்த படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

பாலா இயக்கும் திரைப்படம் கண்டிப்பாக விமர்சன ரீதியாக பேசப்படும். எனவே இந்த படமும் கண்டிப்பாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று இன்று இயக்குனர் பாலா தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், டைட்டிலுடன் வெளியிடபட்டுள்ளது.

அதன்படி படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் சூர்யா ரசிகர்களை பங்கமாய் ஏமாற்றிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால், படத்தின் முதல்பார்வை போஸ்டர் என முழு சூர்யாவின் முகத்தை காமிக்காமல் பாதி சூர்யா முகத்தை மட்டும் காமித்துள்ளனர்.

Manikandan
Published by
Manikandan