கேப்டன் என்ன புனிதரா? சொன்னது பிஸ்மி.. இப்போ என்னாச்சு தெரியுமா?

by Rohini |
vijayakanth
X

vijayakanth

வலைப்பேச்சு விவகாரம்:

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை பற்றியும் நடிகைகளை பற்றியும் தனது youtube சேனல் மூலமாக கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக பல விஷயங்களை பகிர்ந்து வருபவர் வலைப்பேச்சு பிஸ்மி. சினிமாவில் நடக்கும் அத்தனை விஷயங்களை தன்னுடைய சேனல் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார் .சினிமா பற்றிய முழு விவரங்களும் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்பதைப் போல இவருடைய சேனலில் பிஸ்மி ,அந்தணன் ,சக்தி ஆகிய மூவரும் இணைந்து ஏராளமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

அதனால் சில பேர் பாதிக்கவும் செய்திருக்கின்றனர். ஏனெனில் சில நடிகர்களை பற்றியோ நடிகைகளை பற்றியோ நிறைய அவதூறு தகவல்களையும் இவர் பரப்பி இருக்கிறார்கள். அதற்கு அந்த நடிகர்கள் நடிகைகள் தரப்பில் இவர்களுக்கு எதிராக பல எதிர்ப்புகளும் வந்திருக்கின்றன. சமீபத்தில் கூட நயன்தாராவை பற்றி இவர்கள் பேசியதற்கு பதிலுக்கு நயன்தாரா இவர்களை குரங்குகளுடன் ஒப்பிட்டு ஒரு பேட்டியில் பேசி இருந்தார். இப்படி இருக்க சில தினங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் பற்றியும் பிஸ்மி ஒரு பேட்டியில் கடுமையாகப் பேசி அதனால் விஜயகாந்தின் ரசிகர்கள் கொந்தளிப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் பிஸ்மி.

விஜயகாந்த் என்ன புனிதரா?

அதைப்பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் ஜெய்சங்கர் விளக்கமாக அந்த பேட்டியில் என்ன பேசி இருக்கிறார் என்பதை தெளிவுபட கூறி இருக்கிறார். சமீபத்தில் தான் விஜய்காந்திற்க்கு முதல் நினைவு தினம் கொண்டாடப்பட்டது. பிரேமலதாவும் அவர்களுடைய மகன்கள் இருவரும் இந்த நினைவு நாளை குருபூஜை என்ற பெயரில் பெரிய விழாவாக எடுத்திருந்தனர். இது சம்பந்தமாக ஒரு சேனலில் பிஸ்மி நேர்காணல் கொடுக்கும் போது இது ஒரு சுயநல ஆதாயத்திற்காக செய்து வருகிறார்கள். ஒரு கோயிலாக உருவாக்கி தேவையற்ற வகையில் சுயலாபத்திற்காக மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

அவர் என்ன புனிதரா? விஜயகாந்திற்க்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது. இந்த மாதிரி விஜயகாந்தை எந்த அளவு கொச்சையாக பேச வேண்டுமோ அவ்வளவு கொச்சையாகவும் அவரை தரம் தாழ்த்தியும் பிஸ்மி அந்த பேட்டியில் விமர்சனம் செய்திருந்தார். இது கேப்டன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் அந்த சேனலில் கேள்வி கேட்கும் நபரும் ஒரு வார்த்தையை சொல்கிறார். அதாவது மேல்மருவத்தூர் மாதிரி ஒரு அபாயகரமான ஒரு பகுதியாக கோயம்பேடு இப்போது விளங்கி வருகிறது என மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்புகிற மாதிரி அந்த தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார்.

கொந்தளித்த ரசிகர்கள்:

அதற்கு பிஸ்மி முழுக்க முழுக்க விஜயகாந்தையும் அதன் பிறகு இந்து மதத்தையும் கொச்சைப்படுத்துகிற மாதிரி பேசி இருந்தார் .வழக்கமாக ஒருவர் இறந்து போனால் அவரை தெய்வமாக வழிபடுவது தான் நம்முடைய வழக்கம். சில பேர் அவர்களுடைய புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வணங்குவதும் உண்டு. ஆனால் பிஸ்மி இதை ஒரு அரசியல் சுயலாபத்திற்காக செய்கிறார்கள் .கோயிலாக உருவாக்க பார்க்கிறார்கள். மாலை அணிவிக்கிற நிகழ்ச்சி எல்லாம் பைத்தியக்காரத்தனம் முட்டாள்தனம். விஜயகாந்த் என்ன யோக்கியமா? என்றெல்லாம் பிஸ்மி அந்த வீடியோவில் பேசி இருந்தார். இது பயங்கரமாக விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் பூகம்பமாக வெடிக்க சம்பந்தப்பட்ட சேனலை தொடர்பு கொண்டு அந்த வீடியோவையே இப்போது நீக்க வைத்திருக்கிறார்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.

Next Story