×

கள்ளக்காதலால் ஒட்டு மொத்த குடும்பமே சின்னபின்னமான கொடூரம்

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு கணவனை இழந்து வசித்து வந்த லட்சுமி என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.
 

விவசாயிக்கு சுந்தருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி இந்துமதிக் விசயம் தெரியவர தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து லட்சுமியை தனது வீட்டிற்கே கொண்டு வந்துள்ளார் சுந்தர். 

லட்சுமி தனது இரண்டு மகன்களையும் அடித்து கொடுமைபடுத்த சுந்தர் தனது இரு மகன்களுடன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சுந்தரத்தின் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்து அதிச்சியடைந்தனர். 

அந்த வீடியோவில், சம்பவம் நடந்த இரவு சுந்தரம் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் வாழைப்பழத்தில் குருணை மருந்தை கலந்து கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். பின்னர் அதனை தானும் சாப்பிட்டுள்ளார். 

முன்னதாக அந்த வீடியோவில் பேசும் சுந்தரம், '' லட்சுமியால்தான் நாங்கள் சாகப்போகிறோம். நானும் என் பிள்ளைகளும் இறந்து ஆவியாக வந்து உன்னை பழி வாங்குவோம். நாங்கள் சென்ற பிறகாவது யாரையும் ஏமாற்றாமல் இரு என கூறி வீடியோ எடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News