Categories: Cinema News latest news

அஜித் பாட்டு போட்டு நடந்த தனுஷ் பட ஷூட்டிங்.. அதுவும் செம ரொமான்ஸ் காட்சியாம்.. உளறிய இளம் நடிகை..

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பாலிவுட் , ஹாலிவுட், தெலுங்கு சினிமா என ஒவ்வொன்றிலும்சும்மா மாஸ் காட்டி வருகிறார்.இவரது, நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அந்த வகையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” படம் வெளியாகவுள்ளது.

 

 

தற்போது, வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிப் படமான  “வாத்தி” திரைப்படமும் தயாராகி வருகிறது. அந்த வகையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில், மிகவும் இளமையான தோற்றத்தில் அதாவது பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ்.

 

அந்த வகையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் எஸ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர்  தயாரிக்க இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதையும் படிங்களேன் – கதையை கேட்டு தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்.! நல்ல வேளை அத மட்டும் செய்யல…

இதற்கிடையில், நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இப்படம் குறித்து பேசுகையில், அவர் அஜித் ரசிகை என்றும் இந்த படத்தின் ஒரு முக்கிய பாடல் காட்சி படமாக்கும்போது, ஒரு ரொமான்ஸ் காட்சியில் அஜித்தின் வாலி பட பாடலை போட்டு தான் ஷூட்டிங் எடுத்தோம் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan