Connect with us

Cinema News

நான் அவன் இல்லை… ரஜினி பற்றிய சர்ச்சையை தெளிவுபடுத்திய இளம் இயக்குனர்.!

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா நடித்த த்ரில்லர் படம் தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இந்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியவர் தேசிங் பெரியசாமி.

இவரது இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை சில மாதங்களுக்குப் பிறகு, ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனரை பாராட்டினார். மேலும், இயக்குனர் தேசிங்குடனான அவரது நேரில் சந்தித்து  வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தது.

இதனை தொடர்ந்து, தேசிங் பெரியசாமி நடிகர் ரஜினிகாந்துடன் கைகோர்க்கப் போவதாக இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு மத்தியில் இயக்குனர் தேசிங் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, இந்த செய்திகள் உண்மையல்ல என்றும், தனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்களேன் – நச்சரித்த நண்பர்கள்..தெறித்து ஓடிய லோகேஷ் கனகராஜ்.! அப்போ தளபதி 67 நிலைமை.?

 

தற்போது, பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தேசிங் பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை எழுதி வைத்திருக்கிறார் என்று  சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். இந்த தகவல் வைரலாக தொடங்கிய நிலையில், இதற்கும் மறுப்பு தெரிவித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி அந்த மாதிரி ஏதும் நான் எழுதவில்லை நான் அவர் சொல்லும் நபர் இல்லை என்று கூறி இந்த வதந்திக்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top