×

ஆடையைக் கழட்டி நின்ற இளைஞர்….கட்டி வைத்து தர்ம அடி – ஆனால் அதிர்ச்சியான உண்மை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை மக்கள் அடித்தே கொன்றதால் இளைஞர் மரணம் அடைந்துள்ளார்.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை மக்கள் அடித்தே கொன்றதால் இளைஞர் மரணம் அடைந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். பெட்ரோல் பங்கில் வேலைப் பார்க்கும் இவர் நேற்று மதியம் பணிக்காக சென்றுள்ளார். அப்போது ஓரிடத்தில் மலம் கழிக்க இறங்கியுள்ளார். ஒதுக்குபுறமாக இருந்த இடத்தில் இறங்கி ஆடைகளைக் கழட்டியுள்ளார்.

ஆனால் அருகில் வயலில் வேலை செய்த பெண்கள் அவர் அப்படி நிற்பதைப் பார்த்து கத்திக் கூச்சல் போட்டுள்ளனர். இதனையடுத்து அவர் பதற்றத்தில் அங்கிருந்து ஓடவே அவரை விரட்டி பிடித்த ஊர் பொதுமக்கள் கட்டிவைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் வந்து அவரிடம் இருந்து எழுது வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

வீட்டுக்கு சென்ற அவர் பதற்றத்திலேயே இருந்ததாக சொல்லப்படுகிறது. ட்டுக்குச் சென்ற சக்திவேல் சிறு நேரத்தில் உடனே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News