×

சூர்யா படத்தை இனி தியேட்டரில் வெளியிட முடியாது... திரையரங்க சங்க உரிமையாளர்கள் திட்டவட்டம்!!!

கொரோனா தொற்று காரணமாக திரையில் எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் பலர் ஏற்கெனவே தயாராகி இருந்த தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டனர்.

 

அதிலும் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியாகி இருந்தது.

அவரது படத்தை OTTயில் வெளியானதால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இனி அவர் படம் எங்களது திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று கோபமாக அப்போதே தெரிவித்திருந்தனர்.

அண்மையில் திரையரங்க சங்க உரிமையாளர்கள் ஒரு பேட்டியில், சூர்யாவின் படங்கள் இனி OTT தளத்திலேயே வெளியாகட்டும் என கோபமாக தெரிவித்திருக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News