Jananayagan: ஜனநாயகன் நஷ்டம்தான்!.. ஸ்பைடர் மேனுக்கு வெயிட்டிங்!.. தியேட்டர் ஓனர்ஸ் நிம்மதி!..

 
spider man

ஒரு வழியாக ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக வருகிற 24ம் தேதி இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.. அதேநேரம் ஜனநாயகன் படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பது, விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஏனெனில் மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் ஆகியவைகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். இதன் காரணமாக அங்கே குடும்பத்துடன் படம் வந்து யாரும் பார்க்க முடியாது. இது கண்டிப்பாக ஜனநாயகன் படத்தின் வசூலை பாதிக்கும்.

தனித் தியேட்டர்களில் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள்.. அனுமதி கொடுப்பார்கள் என்றாலும் அப்படிப்பட்ட சின்ன தியேட்டர்களில் டிக்கெட் விலை மிகவும் குறைவு.. அதோடு அதுபோன்ற தியேட்டர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு. பெரும்பாலும் பெரிய தியேட்டர்களில் படம் பார்க்கவே ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். எனவே கண்டிப்பாக ஜனநாயகன் படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள A சான்றிதழ் படத்தின் வசூலை பாதிக்கும்.  ஏற்கனவே தாமதமாக படம் ரிலீஸாவதால் லாபத்தின் பங்கீட்டிலும் சதவீதத்தை தயாரிப்பாளர் குறைத்துவிட்டார். எனவே, ஜனநாயகனால் தியேட்டர் அதிபர்களுக்கு லாபம் இருக்காது என சொல்லப்படுகிறது.
 
அதேநேரம் ஜூலை 31ம் தேதி இந்தியாவில் வெளியாகும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படத்தை தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் பெரிதும் நம்பி இருக்கிறார்களாம். ஏனெனில், கண்டிப்பாக இந்த படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வருவார்கள் என்பதால் கண்டிப்பாக ஜனநாயகனில் கிடைக்காத வசூலை ஸ்பைடர் மேன் படத்தில் அள்ளிவிட வேண்டும் என கணக்கு போட்டு காத்திருக்கிறார்களாம்.

Tags

From Around the web