ஒரு நடன இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் நடிகர், இயக்குனர் என அனைத்து துறைகளிலும் தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார் பிரபுதேவா. என்னதான் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் தமிழ் படங்களில் அவ்வப்போது நடிக்க தவறியதில்லை.
பிரபு தேவா நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் முடிந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. அந்தந்த தயாரிப்பாளர்கள் மனது வைத்தால் வரிசையாக ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகும். பகீரா, தேள், மை டியர் பூதம் என பல படங்கள் வரிசையில் இருக்கிறது.
இதில் தேள் படத்தை ஹரிகுமார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. விஜய் டிவி ஒரு படத்தை வாங்கிவிட்டால் திருப்பி திருப்பி போட்டிகாட்டுவார். கும்கி, துப்பாக்கி, பாகுபலி 2 என இதற்கு பல படங்கள் உதாரணம். அந்த வரிசையில் தேள் இடம் பிடிக்குமா என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…