rajini
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 173-வது படத்தை யார் இயக்கப்போவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி மிக பிஸியாக நடித்து வருகின்றார். இளம் நடிகர்கள் கூட இத்தனை திரைப்படங்களை கையில் வைத்திருக்க மாட்டார்கள். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் படிங்க: ஆல் ஏரியாவையும் அதிரவிட்ட புஷ்பா 2… தமிழ்நாட்டுல 100 கோடியாமே?!… மாஸ்டர் பிளான் போங்க…
இப்படத்தை முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த செய்தி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் விரைவில் நடிக்க இருக்கின்றார். இது ரஜினியின் 172வது திரைப்படமாக உருவாக உள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பார் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே ரஜினி அவர்கள் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. இது ஒரு புறம் இருக்க மாரி செல்வராஜிடமும் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு இருக்கின்றார்.
rajini
அதற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினி அடுத்ததாக எந்த பட இயக்குனருடன் இணையப் போகின்றார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் இவர்கள் இருவர் கூட்டணியில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான தளபதி திரைப்படம் இன்றளவும் பிரபலமாக இருந்து வரும் நிலையில் அவருடன் இணைந்து ரஜினிகாந்த் அவர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் அவர்கள் மணிரத்தினத்துடன் இணைந்து தக் லைப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க: சத்தியமா கேட்குறீங்க? வயிறு எரிஞ்சு சாவுங்க.. அஜித் – யோகிபாபு போட்டோவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்
இதனால் ரஜினிகாந்த் அவர்களும் மணிரத்னம் கூட்டணியில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது மூன்று இயக்குனர்களும் ரஜினிகாந்தின் 173 வது படத்திற்கு போட்டி போட்டு வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் யாரை தேர்வு செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…