‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்.. ஒரு முடிவோடதான் இருக்காரு விஜய்

விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு கமர்சியல் படமாக தான் இந்த படத்தை எச் வினோத் எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அதன் பிறகு விஜய் அரசியலில் தீவிரமாக ஆர்வம் காட்ட படத்திலும் கொஞ்சம் அரசியலை சேர்க்கலாம் என்ற நோக்கத்தில் அவருக்கு தெரிந்த அரசியலையும் சேர்த்து இருக்கிறார் எச் வினோத்.
அதற்கு ஏற்ப ஜனநாயகன் என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி மேலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதிலும் சாட்டையை எடுத்து அடிப்பதை போல விஜய் நான் ஆணையிட்டால் என்று சொல்வது மாதிரி இரண்டாவது போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனமும் விஜயின் பக்கம் திரும்பியிருக்கிறது.
இந்த படத்தின் தலைப்பை பற்றி அரசியல் பிரபலங்கள் உட்பட அனைவருமே பல விதங்களில் விவாதிக்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் நான் ஆணையிட்டால் என்ற தலைப்பை பார்த்ததும் சோசியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருக்கின்றன. எம்ஜிஆரின் பாடலை போட்டு அதில் விஜய்யும் ஸ்டாலினும் இருப்பதைப்போல நெட்டிசன்கள் மீம்சை போட்டு சரமாரியாக கிண்டலடித்து இருந்ததை பார்க்க முடிந்தது.
போஸ்டர் வெளியிடும்போதே அந்த போஸ்டரில் படம் அக்டோபர் 2026 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் வெளியாகும் போது கண்டிப்பாக ஒரு கமர்சியல் ஹிட் ஆக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே சமயம் விஜயின் அரசியலுக்கும் இந்த படம் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்த படத்தை வெளியிட வேண்டும் என ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டு வருகிறதாம்.
அதனால் இந்த படம் பொங்கல் ரிலீஸுக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் மே மாதம் தேர்தல் நடக்கும். அதற்கு முன்னதாகவே இந்த படம் வெளியானால் அது விஜயின் அரசியலுக்கு பெரிய அளவில் உதவும் என்று சொல்லப்படுகிறது. எப்படியோ விஜய் இறங்கிட்டார். என்ன வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற எண்ணத்தில்தான் இப்போது விஜய் இருக்கிறார்.