பாரதிராஜா வீட்டில் நடக்கும் சொத்து சண்டை!.. மனோஜின் மனைவியை விரட்டிய ஜனனி!...
இயக்குனர் இமயம் பாரதிராஜா சமீபத்தில் காலமானார். அவரின் ஆசைப்படி தேனியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் பாரதிராஜாவின் குடும்பத்தில் சொத்துச் சண்டை இருப்பது தெரிய வந்திருக்கிறது. பாரதிராஜாவுக்கு மனோஜ் என்கிற மகனும் ஜனனி என்கிற மகளும் இருக்கிறார்கள். அதில் மனோஜ் கேரள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மகள் ஜனனி ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். மனைவி சந்திரலேகா தேனியில் வசித்து வந்தார்..
சென்னை சேத்துப்பட்டில் ஜனனியின் பெயரில் ஒரு வீடு வாங்கினார் பாரதிராஜா. அதுபோக நீலாங்கரையில் வீடு, அதன் அருகில் 9 கிரவுண்ட் காலி மனை, தி.நகரில் ஒரு வீடு, வளசரவாக்கம் நாயுடு ஹால் கட்டிடம், தேனாம்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு தளங்கள். தேனி மற்றும் வத்தலகுண்டில் வீடு மற்றும் பல ஏக்கர் நிலம் ஆகியவை பாரதிராஜாவின் பெயரில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் நீலாங்கரையில் உள்ள வீடு மற்றும் காலி மனையை தனது மகன் மனோஜின் பெயரில் எழுதி வைக்க பாரதிராஜா முடிவெடுத்திருந்த நேரத்தில்தான் மனோஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்..

மனோஜின் மறைவுக்குப் பின் மலேசியாவில் உள்ள மகள் ஜனனி வீட்டில் பாரதிராஜா இருந்தபோது நீலாங்கரை வீட்டை தனது பெயருக்கு ஜனனி தனது பெயரில் ரகசியமாக எழுதி வாங்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.அதேபோல் தனது பெயரில் உள்ள பிளாட்டில் வசித்து வரும் மனோஜின் மனைவி நந்தனாவை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி கொடுக்கும்படி அடையாறு துணை காவல் ஆணையரகத்தில் ஜனனி புகார் அளித்திருக்கிறார்..
பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது அந்த இறுதிச் சடங்கில் மனோஜின் மனைவி நந்தனா தனது இரு மகள்களுடன் கலந்து கொண்டார். அப்போது நந்தனா அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்த ஜனனி அவரை எழ சொல்லிவிட்டு அந்த இடத்தில் அவர் அமர்ந்தார். அப்போது அவருக்கும் ஜனனிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதைப்பார்த்து பதறிப் போன நடிகை ராதிகா அங்கே சென்று ஜனனியிடம் கைகூப்பி அவரை சமாதானம் செய்து அமைதியாக்கினார். அப்போது அருகில் ஜனனியும் அவர் இரு மகள்களும் அழுதபடியே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இருந்தால் பிரச்சனை பெரிதாகும் என நினைத்த உறவினர்கள் ஜனனி மற்றும் அவரின் மகள்களை சென்னைக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது

தற்போது பாரதிராஜா காலமாகி விட்ட நிலையில் அவரின் சொத்துக்களை அடைவதில் ஜனனிக்கும், பாரதிராஜாவின் மருமகள் நந்தனாவுக்கும் இடையே உரிமை பிரச்சினைக எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஜனனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
