Categories: Cinema News latest news

விசில போடுங்க நண்பிகளா! கண்ண பறிக்கும் ‘கோட்’ பட முதல் சிங்கிள்.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான்

GOAT Movie: விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் தயாராகும் படம் கோட். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா நடிக்கிறார்கள்.மேலும் படத்தில் லைலா, பிரசாந்த், பிரபுதேவா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு படக்குழு சென்னை வர இருக்கிறார்கள். மேலும் கோட் படத்தின் ரிலீஸையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கமலுக்கு கதையே பிடிக்கல! ஆனாலும் நடிச்சி ஹிட் கொடுத்தார்!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே இயக்குனர்!

இந்தாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் விஜய் படம் என்றாலே படத்தின் போஸ்டரையும் தாண்டி முதல் அப்டேட்டாக முதல் சிங்கிள் வெளியாகும். அதே போல் இந்தப் படத்தின் முதன் சிங்கிளும் இன்று வெளியாகியிருக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

வழக்கம் போல எல்லா படத்திலேயும் விஜயின் குரலில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் இடம்பெறும். அதே போல் இந்தப் பாடலையும் விஜய்தான் பாடியிருக்கிறார். மதன் கார்கி வரிகளில் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் படம் என்றாலே அவருடைய டான்ஸுக்கு என ஒரு பாடல் இருக்கும். அந்த வகையில் இந்த பாடலும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

இதையும் படிங்க: அருமையான வாய்ப்பை எம்ஜிஆருக்காக விட்டுக் கொடுத்த ஜெய்சங்கர்… எந்தப் படத்திற்கு தெரியுமா?

வயதாக வயதாக விஜயின் க்ரேஸ் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றது. இந்த வயதிலேயும் அவருடைய டான்ஸுக்கு இன்னும் வயதாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ரஞ்சிதமே ரஞ்சிதமே, அரபி சாங் போல இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விஜய் நடனத்தை பார்க்கவே ஒரு கண் பத்தாது. இதில் இந்த பாடலில் விஜயுடன் சேர்ந்து பிரபுதேவா மற்றும் பிரசாந்த் என மூன்று பேருமே நடனத்தில் கலக்கியிருக்கிறார்கள். நடனத்தில் ஒருவருக்கொருவர் சளைச்சவர்கள் இல்லை. இதில் மூன்று பேரும் ஒரே நேரத்தில் ஆடும் போது சொல்லவா வேண்டும்? இன்னும் படத்தில் என்னென்ன விஷயங்கள் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini