×

போதை மருந்து இல்லாமல் திரைப்பட விருந்தே இல்லை....விஷால் நடிகை பகீர் தகவல்

 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் திரைப்பட உலகில் போதை மருந்து புலங்குவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்தாத நடிகர்களே இல்லை என நடிகை கங்கனா ரனாவத் கூறி இந்த புகாரை துவங்கி வைத்தார்.

அதன்பின் கன்னட திரையுலகிலும் நடிகர், நடிகைகள் போதை மருந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிமிர்ந்து நில் திரைப்படத்தில் படத்த ராகினி திவேதி கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தில் படத்தில் நடித்த மாதவி லதா ’கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். போதை மாத்திரைகள் இல்லாமல் அங்கு சினிமா விருந்துகளே நடப்பதில்லை. ஆனால், அரசியல் செல்வாக்கால் அங்கு யாரும் போலீசாரிடம் சிக்குவதில்லை’ என பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News