×

கோலிக்கு நிகராக கிரிக்கெட் உலகில் எவருமே இல்லை – பாகிஸ்தான் வீரர் பேச்சால் சர்ச்சை!

சோயிப் அக்தர் தன்னுடைய யுட்யூப் சேனலில் விராட் கோலியை வானளாவ புகழ்ந்து பேசியுள்ளார்.

 

சோயிப் அக்தர் தன்னுடைய யுட்யூப் சேனலில் விராட் கோலியை வானளாவ புகழ்ந்து பேசியுள்ளார்.

தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் சிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, ஜோ ரூட், பாபர் ஆசம், கேன் வில்லியம்ஸன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை சொல்லலாம். ஆனால் எல்லா வீரர்களை விடவும் அனைத்து வடிவிலான போட்டிகளிலும்  கோலி தலை சிறந்தவராக உள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தன்னுடைய யுடியூப் சேனலில் ‘நான் பாகிஸ்தானில் விராட் கோலியையும் புகழக்கூடாது. உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் ஒருவர் கூட இல்லை. போய் புள்ளி விவரங்களைப் பாருங்கள். பிறகு என்னை விமர்சியுங்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போல இந்திய வீரர்கள் இருக்க வேண்டும் என இந்திய மக்கள் நினைத்தனர். ஆனால் இப்போது நிலைமை வேறு.’ எனக் கூறியுள்ளார். அக்தர் இப்படி கோலியைப் புகழ்ந்து பேசுவதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News