இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது.. திமுக மேடையில் சர்ச்சை பேச்சு...

தமிழகத்தில் எதிர்காட்சியாக உள்ள திமுக எப்போதும் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி ஒரு மதமே இல்லை என திமுக ஆதரவாளர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதால் சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவர்வதற்காக திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய திமுக பிரமுகர் கலையரசி ‘ இந்து மதம் என்கிற வார்த்தையை யாரும் உச்சரிக்க வேண்டாம். அப்படி ஒரு மதமெ எஇல்லை’ என தெரிவித்தார். கலையரசியின் பேச்சை ரசித்தவாறு ஸ்டாலின் மேடையில் அமர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து, இந்து மத துவேஷத்தை திமுக கையில் எடுப்பதாகவும், திட்டமிட்டு தொடர்ந்து மதப்பிரிவிணையை ஏற்படுத்த திமுக முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே கருப்பர் கூட்டம் இந்து கடவுளை அசிங்கப்படுத்தி வீடியோ வெளியிட்டது. ஜெயந்தி விழாவுக்கு சென்ற ஸ்டாலின் திருநீரை பூசிக்கொள்ளாமல் கீழே போட்டார். தற்போது மதப்பிரிவினியை ஏற்படுத்தும் விதமாக திமுகவினர் மேடைகளில் பேசி வருவதாக மக்கள் கருத துவங்கியுள்ளனர்.