விஜய் துப்பாக்கிய வேணுனா வாங்கியிருக்கலாம்.. தனுஷ்கிட்ட முடியுமா? SK குறித்து பிரபலம் பகீர்

by Rohini |
dhanush
X

மனக்கசப்பு: சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருவருக்கும் நிறைய ஈகோ பிரச்சனை இருக்கிறது .இருவருமே தங்கள் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு ஒருவருக்கொருவரை மறைமுகமாக தாக்கிய பேச்சு தான் என்றும் ஒரு செய்தி வைரல் ஆகி வந்தது. அதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறிய தகவல் தான் இது .

தனுஷ் இல்லைனா எஸ்கே இல்ல: இது எந்த அளவுக்கு உண்மை என தெரியாது .ஆனால் இரண்டு பேருக்கும் இடையில் ஒரு மனக்கசப்பு இருக்கிறது என அனைவருக்குமே தெரியும் .ஏனெனில் சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வருவதற்கு தனுஷ் தான் ஒரு முக்கிய காரணம். இவரை காமெடியனாக தன்னுடைய மூணு படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவருடைய திறமையை பார்த்து தனுஷே தான் தயாரிக்கும் படங்களில் ஹீரோவாக புக் பண்ணார் .

எரிச்சலூட்டிய எஸ்கே: அது அனைவருக்குமே தெரிந்த விஷயம் .அதன் பிறகு சிவகார்த்திகேயன் செய்த வேலை தனுஷிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனுஷுக்கு எதிராக பல்வேறு வேலைகளை செய்தார் சிவகார்த்திகேயன். அதில் இரண்டு பேருக்கும் இடையில் ஒரு பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டது .அது இந்த நிமிடம் வரை இருக்கிறது .தனுஷ் ஒன்று செய்கிறார் என்றால் அதையே சிவகார்த்திகேயனும் செய்வார் .அவருடைய அலுவலகத்திற்கு எதிராகவே தன்னுடைய அலுவலகத்தையும் சிவகார்த்திகேயன் போட்டார்.

இப்போ ஓவராத்தான் இருக்கும்: இந்த மாதிரி தனுஷை எரிச்சலூட்டும் சில செயல்களை சிவகார்த்திகேயன் செய்தார் .இது நிச்சயமாக தனுஷுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும். ஆரம்பக்காலத்திலேயே தனுஷ் மீது சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் இருந்தது .இன்று சிவகார்த்திகேயன் ஓரளவு வளர்ந்த நடிகராக மாறிவிட்டார் .அப்போ இன்னும் அதைவிட அதிகமான வெருப்பும் காழ்ப்புணர்ச்சியும் தான் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் என பிஸ்மி கூறினார்.

அப்போ சிவகார்த்திகேயன் துப்பாக்கியை தனுஷ் பறிக்க முயல்கிறாரா என்ற ஒரு கேள்வியை கேட்க அதற்கும் பிஸ்மி அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சிவகார்த்திகேயன் கிட்ட இருக்கும் துப்பாக்கியை தனுஷ் பறிக்க வேண்டிய அவசியமே இல்லை .அதற்கு காரணம் சிவகார்த்திகேயனை விட ஒரு படி மேலாகத்தான் தனுஷ் இருக்கிறார். ஏனெனில் சிவகார்த்திகேயன் மாதிரி இணைய கூலிப்படைகளை வைத்து பப்ளிசிட்டி பண்ணுகிறவர் தனுஷ் கிடையாது.


தனுஷை பொருத்தவரைக்கும் ஒரு நடிகராக அவருடைய கெரியரை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம், இன்னொரு பக்கம் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் அவர் எடுக்கும் சிரத்தை என அவருடைய லைன் அப் உண்மையிலேயே பிரமாதமாக தான் இருக்கிறது. அதனால் இவருடைய துப்பாக்கியை பிடுங்கும் இடத்தில் தனுஷ் இல்லை என்றும் பிஸ்மி கூறி இருக்கிறார்.

Next Story