Categories: Cinema News latest news throwback stories

நீங்க வந்தா தேவர் மகன்.! இல்லனா வேணாம்.! 30 வருடத்திற்கு முன் கமல் எடுத்த அதிரடி முடிவு.!

1992ஆம் ஆண்டு கமலின் எழுத்தில் உருவாகி பரதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தேவர்மகன். தற்போது வரை சிறந்த இந்திய திரைப்படங்களில் இந்த தேவர்மகன் திரைப்படமும் முக்கிய இடத்தில் உள்ளது. தற்போதும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்த திரைப்படம் பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் உலாவரும். இந்த திரைப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் 7 நாளில் முடித்து விட்டாராம். முதலில் வேறு ஒரு தலைப்பு வைத்து பின்னர் இளையராஜா இந்த படத்திற்கு  தேவர் மகன் தலைப்பு சரியாக இருக்கும் என சிபார்சு செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

அதேபோல் இந்த படத்தின் பெரிய தேவர் கதாபாத்திரத்தினை வடிவமைக்கும் போது இந்த கதாபாத்திரத்திற்கு சிவாஜிதான் சரியாக இருப்பார் என்று கமல் தீர்மானம் செய்து விட்டாராம்.

ஆனால், அந்த சமயம் சிவாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை சுத்தமாகத் தவிர்த்து வந்த நேரம். அதிலும் அவருக்கு அப்போது தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வந்தாராம்.

ஆதலால், அவரது மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவருமே சிவாஜி நடிப்பதை விரும்பவில்லை. இருந்தாலும், கமல்ஹாசன் பிடிவாதமாக எவ்வளவு நாட்கள் ஆனாலும் சரி தேவர் மகன் திரைப்படம் சிவாஜி கணேசன் இல்லாமல் உருவாகாது என்று காத்திருந்தாராம்.

இதையும் படியுங்களேன் – வில்லன் வேஷத்துக்கு வேற ஆள் கிடைக்கலையா.?! சிவகார்த்திகேயனை நொந்து கொள்ளும் ரசிகர்கள்.!

அதன் பின்னர், உடலில் பேஸ்மேக்கர் எனும் கருவி பொருத்தப்பட்டு அந்த படத்தில் நடித்துக் கொடுத்தாராம் சிவாஜி கணேசன். தற்போது வரை அந்த கதாபாத்திரத்திற்கு அவரை விட பொருத்தமான நபர் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தான் பலரது கருத்து. அதன் காரணமாகத்தான் கமல்ஹாசன் அவ்வளவு தீர்க்கமாக உறுதியாக சிவாஜிதான் நடிக்க வேண்டுமென்று இருந்துள்ளார் என்பது படம் பார்த்த அத்தனை பேருக்கும் தெரியும்.

Manikandan
Published by
Manikandan