Vijay: விஜய் டெபாசிட் கூட வாங்க முடியாது.. அடங்காத ராஜகுமாரன்!.. நல்லா சிக்குனாரு!...
தேவயாணி கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் தற்போது விஜயின் அரசியல் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக ராஜகுமாரனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதுவும் சினிமாவில் மிகவும் போற்றத்தக்க வகையில் இருந்த இயக்குனரான மகேந்திரனின் படைப்பை அவர் குறைத்து மதிப்பிட்டு பேசியிருந்தார்.
மகேந்திரன், பாலுமகேந்திரா, கே. பாலச்சந்தர் போன்றோர்களை சினிமாவில் ஒரு பெரும் சிம்மாசனமாக பார்த்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மகேந்திரன் எடுத்த படங்கள்லாம் ஒரு படமா? குறிப்பாக உதிரிப்பூக்கள் படத்தை பற்றி பேசினார். அந்தளவுக்கு படம் நல்லாவே இல்லை என்றும் கூறியிருந்தார். இது அமீர் உட்பட பல பிரபலங்களின் கோபத்திற்கு ஆளாகியது.
இவருடைய இந்த பேச்சை தேவயாணி கண்டுக்க மாட்டாரா இல்லையா? என்றெல்லாம் ராஜகுமாரனை திட்டி வந்தனர். இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகையை பற்றியும் கூறியிருக்கிறார். அதாவது வரும் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று விஜயை கூறியுள்ளார் ராஜகுமாரான்.
தேவயாணி பிறந்ததும் விஜய் பிறந்ததும் ஜூன் 22 தான். அதான் இப்போது வரை இரண்டு பேரும் உச்சத்தில் இருக்கிறார்கள். விஜயை நாங்கள் பொத்தி பொத்தி பூங்கொத்து போல் 30 வருடம் பாதுகாத்தோம். இப்போ வெயிலில் மக்களோடு எப்படி நிப்பார்? முதல்வர் ஸ்டாலின் போல் அவரால் தெருவில் நடக்க முடியுமா? விஜய் கூட்டணி வைக்கவில்லை என்றால் விஜய் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று ராஜகுமாரன் பேசியுள்ளார்.

இந்த கருத்து விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது. ராஜகுமாரை மொத்தமாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர். இதுவரை தேவயாணி கணவர் என்ற ஒரு மதிப்பும் மரியாதையும் அவர் மேல் இருந்து வந்தது. ஆனால் அவருடைய சமீபகால நடவடிக்கை பேச்சு அனைவரையும் ஏன் திரைப்பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.
