தில்லானா மோகனாம்பாள், கான் சிட்டியின் சிறப்பு... வெற்றி பெற இதுதான் காரணமா?

 
thillana mohanambal, concity

எந்த ஒரு திரைப்படத்திற்கும் நட்சத்திரங்கள் அமைவது ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு தில்லானா மோகனாம்பாளை எடுத்துக் கொள்ளலாம். அதில் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜி நடிக்காம வேறு யாரோ ஒரு நடிகர் நடித்து, அந்தக் கதாநாயகிக்காக நாட்டிய பேரொளி பத்மினி நடிக்காம வேறொரு நாயகி நடித்து இருந்தால் அந்தப் படம் இந்தளவு வெற்றி கண்டு இருக்காது. அந்த ஜோடி நடித்து இருந்ததாலதான் இன்று வரை அந்தப் படம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

அது மாதிரி நட்சத்திர தேர்வுகள் சரியாக அமைந்து வெற்றி பெற்ற படங்கள் பலவற்றைச் சொல்லலாம். அப்படி சமீபத்தில் அமைந்த ஒரு படம் தான் கான் சிட்டி. அதன் கதை சற்று புதியது. ஆனாலும், திரைக்கதை அந்தளவுக்கு சுவாரசியமாக அமைக்கப்படவில்லை என்பது ஓரளவுக்கு உண்மையான விஷயம். அப்படி இருந்தும் அந்தப் படத்துக்கு மக்கள் இன்றளவும் வரவேற்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான விஷயம்

சரியான கதாபாத்திரங்களுக்கு சரியான நட்சத்திர நடிகர்களை அவர்கள் தேர்வு செய்தது தான். அர்ஜூன்தாஸ், அன்னபென் இருவருக்குமே அந்தக் கதாபாத்திரம் வித்தியாசமானது. இருவருமே ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் அந்த 2 பேரையும் தாண்டி படத்துல ஸ்கோர் பண்றதுன்னா வடிவுக்கரசி, யோகிபாபு தான். வடிவுக்கரசியை இதுவரைக்கும் இப்படி வித்தியாசமாக திரையில பார்த்ததே இல்லை எனலாம். சரியான கதாபாத்திரம் அவங்க கையில கிடைச்ச உடனே அந்தக் கதாபாத்திரத்தில் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ அந்தளவு சிறப்பான நடிப்பை வடிவுக்கரசி வெளிப்படுத்தி இருக்காங்க.

அதனால தான் திரையில் அவரைப் பார்க்கும்போது எல்லாம் ரசிகர்கள் அந்தளவு கொண்டாடுகிறார்கள். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

Tags

From Around the web