Categories: Cinema News latest news

தனுஷ் இருக்கும் இடம் தேடி அலைந்தது தான் மிச்சம்…விரக்தியில் படக்குழு.!

தனுஷ் தற்போது ஆந்திரா பக்கமே ஒதுங்கி விட்டார் போல. ரஜினி மகளை பிரிந்ததாக அறிவித்த பின்பு தமிழகம் பக்கம் வருவதை தவிர்த்து வருகிறார் என்கிற பேச்சுதான் கோடம்பாக்கம் முழுக்க கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அப்படியே வந்தாலும், யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்கிறாராம் தனுஷ். ஏன் வீண் கேள்விகளை எதர்கொள்ள வேண்டும் என விளக்குகிறாராஅல்லது உணமையில் பிசியாக தான் இருக்கிறாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

சரி, விஷயத்துக்கு வருவோம். தனுஷ் நடிப்பில், மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். நீண்ட நாட்களுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளது. இது நமக்கு தெரியும்.

இதையும் படியுங்களேன் – அசிங்கப்படுத்திய பூஜா ஹெக்டே…. பெருந்தன்மை காட்டிய சமந்தா….

இப்பட ஷூட்டிங் எடிட்டிங் வேலைகள் முடிந்ததாம். அடுத்து பாடல் பதிவு, டப்பிங் போன்ற பணிகள் இருக்கிறதாம். அதற்கு எப்போது சென்னை வருவார் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். அதனால், படக்குழு விறுவிறுவென ஹைதிராபாத்திற்கு சென்று அங்கேயே டப்பிங் தொடங்கிவிடலாம் என திட்டமிட்டு கிளம்பிவிட்டதாம்.

அங்கு வைத்து தான் பாடல் எழுதுவது, டப்பிங் பணிகளை முடிக்க உள்ளாரா அல்லது வேறு ஏதேனும் திட்டத்தை தனுஷ் வைத்துள்ளாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Manikandan
Published by
Manikandan