முருகன் மட்டும்தான் தமிழ் கடவுளா?.. தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டால் தமிழர்களா?.. திருமா சர்ச்சை பேச்சு

திமுகவினரும் திமுக கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து இந்து மத கடவுள்களை மோசமான வகையில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழகத்தில் தைப்பூசத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய போது ‘முருகன் மட்டும் தமிழ் கடவுள் என்று சொல்லி தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டுவிட்டால் தமிழர்களாக நாம் தலை நிமிர்ந்து விடுவோமா… ?
முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரது அண்ணன் விநாயகர் என்ன இந்தி கடவுளா ?
எல்லாம் ஓட்டுக்காக !
விநாயகரும் முருகனும் ஒரே அப்பனுக்கும் அம்மாவுக்கும் பிறந்தவர்கள்தானே, அவருக்கு (சிவனுக்கு) இரண்டு மூன்று மனைவிகள் இருக்கலாம் – ஆனால் பிள்ளைகள் இரண்டுதானே!
ஏன் விநாயகரை நாம் தமிழ் கடவுள் என்று சொல்லவில்லை’ எனப் பேசினார்.
திருமாவளவனின் இந்த பேச்சு இந்துக்களை கோபப்படுத்தியதோடு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.