நயன்தாரா, அஜித் தலையில் கிரீடம் இருக்குன்னு நெனப்பு!.. திருப்பூர் சுப்ரமணியம் அட்டாக்!..

 
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், நயன்தாரா ஆகியோர் தங்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து திருப்பூர் சுப்பிரமணியன் பேசிய கருத்துகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புரமோஷனுக்கு வரவில்லை என்றும், அஜித்தின் டேர் டெவில் படத்தின் பூஜையில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும்  தொகுப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள்கூட தங்களது படங்களின் புரமோஷனுக்கு வருகிறார்கள். ஆனால், அஜித்தும் நயன்தாராவும் புரமோஷனுக்கு வராதது கெத்து என நினைத்து கொள்கின்றனர்.


மேலும், புரமோஷனுக்கு வராமல் இருப்பது கெத்து கிடையாது , அது அவர்களுடைய மார்க்கெட்டை பாதிக்கும், இருவரும் தொடர்ந்து இதேபோன்று பட புரமோஷன்களுக்கு வராமல் இருந்தால், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள் என்றும் பேசியுள்ளார்.

அஜித் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில், தயாரிப்பாளருக்காக படத்தை புரமோஷன் செய்யும் எண்ணம் அவரிடம் இல்லை , கார் மற்றும் பிஸ்கட் விளம்பரங்களில் நடிக்க முடிகிறது; ஆனால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு புரமோஷன் செய்ய வருவதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

அதேபோல், நயன்தாரா தனது சொந்த தயாரிப்புகளுக்கு மட்டுமே புரமோஷனில் பங்கேற்கிறார் ஆனால் மற்ற படங்களுக்கு வருவதில்லை, இருவரும் இதை தொடர்ந்தால், சொந்தமாகப் படம் தயாரித்தால் உண்டு என்கிற நிலை உருவாகி விடும் என்று எச்சரித்துள்ளார்.

CR  Desk
CR Desk

7959 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web