பேசுனது 1 கோடி வாங்குனது 5 கோடி: சிவகார்த்திகேயன் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சின்னதிரையிலிருந்து வந்து வெள்ளித்திரையில் அதுவும் குறுகிய காலத்திலேயே பெரிய உயரத்திற்கு சென்றவர் இவர் மட்டும்தான்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் ரஜினி முருகன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றியை அடுத்து பொன்ராம் இயக்கிய இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஞ்சான், உத்தமவில்லன் பொன்ற தொடர் தோல்வி படங்களினால் நஷ்டம் அடைந்த லிங்கும்சாமி இப்படத்தை தயாரித்தார். வருத்தபடாத வாலிபர் சங்கம் வெளியானபோதே சிவகார்த்திகேயனை தங்களது நிறுவனத்திற்கு லிங்குசாமி ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்ர் திருப்பூர் சுப்பிரமணியம் சாய் வித் சித்ரா சேனலுக்கு அளித்த பேட்டியில், லிங்கு சாமி தயாரித்த ரஜினி முருகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.என்ன என்று விசாரித்தபோது சிவகார்த்திகேயன் அப்படத்திற்கு சம்பளமாக ரூ.1 கோடி பேசி ஒப்பந்தம் செய்யப்படிருந்தார்., ஆனால் அவரது சில படஙகள் வெற்றியால் ரஜினி முருகன் படத்திற்கு 5 கோடி வரை சம்பளமாக ஒப்பந்த்தை மீறி வாங்கியுள்ளார். இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடன் அதிகரித்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து நானும் சில நண்பர்களும் சிவகார்த்திகேயனிடம் நேரில் பேசினோம். அப்போது கோப்பட்ட்ட சிவா என்னிடம் ஏன் வந்து இதை கூறுகிறீர்கள் என்றார். பின்னர் ஒரு வழியாக ஒப்பந்ததை மீறி தான் வாங்கிய 4 கோடியை திருப்பி தந்தார். இதனை பார்த்த சிலர் சிவாவை மிறட்டி பணத்தை வாங்கினோம் என்றார்கள். யார் மிரட்டி வாங்கியது நாங்களா அல்லது 1 கோடி சம்பளமாக பேசி ஒப்பந்தம் செய்துவிட்டு 5 கோடியை வாங்கிய நபரா என்று கேள்வி எழுப்பினார்.
