Oh Sukumari Box Office : திருவீர் - ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஓ சுகுமாரி' முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Oh sukumari day 1 collection

'ஓ சுகுமாரி' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. ரொமான்டிக் காமெடி ஜானரில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'ஓ சுகுமாரி'.

இந்த படத்தை பரத் தர்ஷன் என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோவாக திருவீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இப்படம் நேற்று (ஜூலை 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதில் ஜான்சி, ஶ்ரீநிவாஸ் கவிரெட்டி, முரளிதர் கௌத் முக்கிய ரோல்களில் வலம் வந்துள்ளார்கள்.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.57 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web