"அதிபுருஷ்" பிரபாஸை மிரட்டப்போகும் வில்லன் இந்த நடிகர் தான்!
பிரபாஸ் நடிக்கும் அதிபுருஷ் படத்தில் வில்லனாகும் பாலிவுட் நடிகர்

உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கான ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தப் படம் பாகுபலி. இதன் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் பெரும் வெற்றி பெற்று புகழையும் வசூலையும் உலகளவில் அள்ளிக்குவித்தது.
பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்தின் மூலம் பெண்கள் மத்தியில் டார்லிங் என்றே கொண்டாடப்படுபவர். இதையடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்தார். பாகுபலி வெற்றிக்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அட்டர் பிளாப் ஆனது. இதனால் மீண்டும் இதிகாச கதையே கையில் எடுத்துள்ளார் பிரபாஸ்.
ஆம், ஓம் ரவுட் இயக்கத்தில் பிரபாஸ் "அதிபுருஷ்" என்ற தனது 22வது படத்தில் நடிக்கவுள்ளார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷண் குமார் தயாரிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என 5 மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சற்றுமுன் இன்ஸ்டாவில் வெளியிட்டு இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்தார் பிரபாஸ்.
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் லங்கேஷ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிக்க உள்ளதை படத்தின் இயக்குனர் ஓம் ரவுட் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ போஸ்டருடன் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.