Categories: Cinema News latest news throwback stories

கமலை இந்தி பட உலகில் இருந்து வெளியேற்ற திட்டம் போட்ட மாஸ் ஹிட் பிரபலம்..!

Kamalhassan: சினிமாவில் எத்தனை ட்ரோல்களை சந்தித்தாலும் இவரிடம் இருக்கும் சினிமா அறிவுக்கு நிகர் இப்போது எந்த மாநில சினிமா பிரபலங்களுக்குமே இல்லை என்பதே முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட கமலால் ஒரு பிரபலம் தன் கேரியரே காலி ஆகி விடுமா என பயந்து ஒரு விஷயத்தினையே செய்தாராம்.

களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் அப்போதே பேசு பொருளானார். தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் வந்தது. வளர்ந்த இளைஞராக அரங்கேற்றம் படத்தில் நடித்தார். ஆனால் அவர் தனியாக முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் கன்னியாகுமரி என்னும் மலையாள திரைப்படம் தான்.

இதையும் படிங்க: படத்தை பாத்துட்டு சம்பளம் வேண்டாம்னு சொல்லிய சூர்யா!.. இவரயா போட்டு அடிச்சீங்க!..

பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழில் ஹிட் நாயகனாக மாறினார். தொடர்ச்சியாக கிடைத்த பட வாய்ப்புகள் அவருக்கு வேறு ஒரு இடத்தினை கோலிவுட்டில் பிடித்து கொடுத்தது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தியில் கூட ஹிட் படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்த கமல்ஹாசன் இந்தியின் ஜாம்பவானான அமிதாப்பை அலற வைத்த சம்பவமும் ஒன்று நடந்து இருப்பதாக திரை விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் இருந்து, அமிதாப்பை பற்றி குறையே கூற முடியாத நிலை தான் இந்தி சினிமாவில் இருந்தது.

இதையும் படிங்க: வாழ்க்கையே விரக்தியில் முத்து செய்த விஷயம்..! திக்கு தெரியாமல் இருக்கும் மீனா..!

அதையடுத்து அமிதாப் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு படம் இந்தி இயக்குனரை வைத்து தயாரானது. ஆனால் அந்த படம் பாதியிலேயே சொல்லப்படாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. இது கமலை வைத்து படம் எடுத்தால் படம் முடியாது என்பதை நிரூபிக்க அமிதாப் செய்த ப்ளான். அவர் சர்வாதிகாரியாக இதை மாதிரி நிறைய படங்களுக்கு பிரச்னை கொடுத்து கமலை இந்தியில் நீடிக்கவிடாமல் செய்தார் எனக் குறிப்பிட்டார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily