×

இளம்பெண்களின் பின்னால் தட்டுவது.. இளைஞருக்கு இப்படி ஒரு ஹாபியா?.... 

இளம்பெண்களை பின் தொடர்ந்து அவர்களின் பின்னால் தட்டி செல்வதை ஹாபியாக கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

சென்னை நங்கநல்லூர் பகுதியில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் அவரை சுற்றி சுற்றி வந்த ஒரு வாலிபர் திடீரென அவரின் பின்னால் தட்டி விட்டு சென்றுள்ளார். அவர் கூச்சல் போட்டதும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 

அதேபோல், மற்றொரு பெண்ணையும் இதேபோல் அவர் பின்னால் தட்டி செல்ல அங்கிருந்த பொதுமக்கள் அவரை விட்டிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர் பெயர் சதீஷ்குமார் மற்றும் மடிப்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வருபவர் என்றும் தெரிந்தது. அதோடு, ஐ.டி.துறையில் பணிபுரியும் அவருக்கு திருமணமாகி 3 வருடமாகியதும் தெரியவந்தது.

பெண்களின் பின்னால் சென்று தட்டுவது தனக்கு மிகவும் பிடித்த ஹாபி என அவர் போலீசாரிடம் கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார். தற்போது சதீஷ்குமார் புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தகக்து.

From around the web

Trending Videos

Tamilnadu News