பாக்யராஜின் மறைவுக்கு இதுவும் காரணம்!.. பயில்வான் ரங்கநாதன் பகீர்!...

 
bhagyaraj


ரசிகர்களாலும், திரையுலகினராலும் திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் சமீபத்தில் மரணமடைந்தார். காலையில் நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அவருக்கு ரஜினி, கமல், முதலமைச்சர் விஜய், சீயான் விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

பாக்கியராவை வைத்து மூன்று படங்கள் தயாரானது.. ஆனால் பைனான்சியர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டதால் அந்த மூன்று படங்களும் அப்படியே நின்றது. அதன்பின் மூன்று படங்களையும் தானே தயாரித்தார் பாக்யராஜ். அதில் அவருக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டு சில சொத்துக்களை விற்றார். அதேபோல் எழுத்தாளர் சங்கத்துக்கு இயக்குனர் மதுமதி என்பவரின் தந்தை 10 லட்சம் ரூபாய் நிதியளித்தார். அதை அப்போதைய நிர்வாகி பிறைசூடன் வருமான வரி கட்டுவதை தவிர்ப்பதற்காக சில வேலைகளை செய்தார். அது பிரச்சினையாக மாறியது.

இதில் பலரின் பார்வையும் பாக்யராஜ் பக்கம் திரும்பியது. இதில் பாக்யராஜுக்கு சங்கடம் ஏற்பட்டது. பாக்கியராஜை சிலர் நம்பவில்லை/ சில சங்கங்கள் அவருக்கு எதிராக திரும்பின. பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தனர். இந்த விஷயம் பாக்கியராஜை மனதளவில் பாதித்தது’ என கூயிருக்கிறார்..

Tags

From Around the web