×

இதுக்குலாம் தில்லு வேணும்.. நிர்வாணமாக நடித்த நடிகையை பாராட்டிய இயக்குனர்

ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கேவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தமிழில் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.  அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சேரன் நடிப்பில் உருவான ராஜாவுகு செக் திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் உள்ளாடை எதுவும் அணியாமல் அரை நிர்வாணமாக அவர் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஒரு துண்டு மட்டும் இருப்பது அக்காட்சி படம்பிடிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அப்படத்தின் நாயகன் இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும். இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது...மிக்க நன்றி’ என பதிவிட்டுள்ளார். பாராட்டியதற்காக சிருஷ்டி டாங்கே நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News