×

வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கவேண்டும் - ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

 

நடிகை ரகுல் பிரீத் சிங் சினிமா துறையில் நுழைவதற்கு முன்னரே தன்னுடைய 18 வயதில் மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதன் மூலம் பிரபலமாகி தான் பின்னர் படங்ககளில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து மூன்று கண்டீஷன்ஸ்களை முன்வைத்துள்ளார். அதில்...

1. என்னைவிட அவர் மிகவும் உயரமான நபராக இருக்கவேண்டும். எந்த அளவிற்கு என்றால், நான் ஹீல்ஸ் அணிந்திருந்தாலும் அவரை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்.

2. அவர் மிகவும் புத்திசாலியான நபராக இருக்கவேண்டும்.

3. வாழ்வில் ஏதேனும் லட்சியத்தை அடையவேண்டும் என நோக்கத்துடன் இருபவராக இருத்தல் மிகவும் அவசியம் என்றார். அதுசரி இந்த மூன்று தகுதியும் உங்களிடம் இருக்கிறதா...?

From around the web

Trending Videos

Tamilnadu News