×

இப்படியே போனா ஆரிதான் வின்னர் - குவியும் ரசிகர்கள் ஆதரவு

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக பாடகி சுசித்ரா பங்கேற்றுள்ளார். இந்த ப்ரோமோவில் சுசித்ராவை பார்த்ததும் பலருக்கும் ஓவியாவை பார்ப்பது போல் உள்ளதாக கூறியுள்ளார். சுசித்ரா வீட்டில் வந்ததும் எல்லோரும் அதிர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அர்ச்சனா மட்டும்  அதிர்ச்சியில் ஷாக் ரியாக்ஷன் கொடுத்தார்.

அதேபோல், எதையும் ஒபனாக, தவறுகளை சுட்டிக்காட்டி பேசும் ஆரியையும் அவருக்கு பிடிக்கவில்லை. கடந்த வாரம் பாலாஜி, அர்ச்சனா, ரியோ ஆகியோரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆரி பேசியிருந்தார். இதற்கு கமலும் பாராட்டு தெரிவித்திருந்தார். இது அர்ச்சனா, ரியோ, பாலாஜிக்கு பிடிக்கவில்லை.

எனவே, இந்த வாரம் எவிக்‌ஷன் பரிந்துரையில் அவர்கள் அனைவரும் ஆரியை நாமினேட் செய்துள்ளனர். இது நெட்டிசன்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆரிக்கு நாங்கள் வாக்களிப்போம் என களத்தில் இறங்கியுள்ளனர். 

இதை வைத்து பார்க்கும் போது அர்ச்சனா, ரியோ, பாலாஜி ஆகியோர் சேர்ந்து ஆரியை வெற்றி பெற வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News