×

சைக்கோ படத்தை இப்படித்தான் எடுத்தனர் - கதறி அழும் வில்லன் நடிகர்

சைக்கோ திரைப்படத்தில் வில்லனாக நடிகரின் பேட்டி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
 

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் சைக்கோவாக நடித்து மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பவர் ராஜ்குமார் பிச்சுமணி. இவருக்கு இது முதல் திரைப்படமாகும். 

இவர் சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சைக்கோ படத்தில் என்னை மிஷ்கின் சார் நடிக்க வைத்தார். அவர் என்ன செய்து காட்டினாரோ அதைத்தான் நான் செய்தேன். ஒரு காட்சியில் நிர்வாணமாக 200 மீட்டர் நீளத்திற்கு ஓட வேண்டும் எனவும், இதுதான் படத்தின் முதுகெலும்பான காட்சி என்றும் மிஷ்கின் சார் என்னிடம் கூறினார். நானும் ஓடினேன். ஆனால், அவருக்கு திருப்தி இல்லை. மீண்டும் ஓட சொன்னார். 

எனவே, அடுத்த முறை வெறிகொண்டு ஓடினேன். அப்போது, சுவரில்வேகமாக மோதி கிழே விழுந்து மயக்கமடைந்து விட்டேன். எல்லோரும் படப்பிடிப்பு நடக்காது என நினைத்து பயந்துவிட்டனர். ஆனால், அதன்பின் மீண்டும் நடித்தேன் என உருக்கமாக பேட்டி கொடுத்துள்ளார். தனது தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கஷ்டப்பட்டு நடித்ததாக கூறிய அவர் சில இடங்களில் கதறியும் அழுதார்.

From around the web

Trending Videos

Tamilnadu News