×

இது ஒரு போட்டோ போதும்... மனைவி, குழந்தைகள் மீது சூர்யா எவ்ளோவ் பாசம் வச்சிருக்காருனு காட்ட!

நடிகை ஜோதிகா சூர்யாவை குறித்தும் அவரது காதல் குறித்தும் பல மேடைகளில் நாம் பேசி கேட்டுளோம். அதே போல் சூர்யாவும் ஜோதிகாவிற்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவருக்காக ஆதரவாக நின்று குரல் கொடுப்பார். சமீபத்தில் தஞ்சை பெரிய கோவில் விவகாரம், பொன்மகள் வந்தால் படத்தின் ரிலீஸ் பிரச்சனை உள்ளிட்டவற்றில் பங்கெடுத்து ஜோதிகாவிற்கு பில்லர் சப்போர்ட்டாக இருந்து வருகிறார்.

 

அதுமட்டுமல்லாமல் இருவரும் தங்கள் குழந்தைகள் மீதும், அவர்களின் ஒழுக்கமான வளர்ச்சியிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக சூர்யா - ஜோதிகா காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தியா , தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பல காதலர்களுக்கு இந்த ஜோடி சிறந்த காதலர்களாக இருந்து வருகின்றனர்.

surya
Caption

குடும்பத்தின் மீது அதிக பாசமும் அக்கறையும் கொண்ட சூர்யா நேற்று கூட வீட்டில் சமைக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தற்போது சூர்யா தனது கையில் மருதாணியால் மனைவி ஜோதிகா , மகள் தியா , மகன் தேவ் உள்ளிட்ட மூவரின் பெயரை கையில் எழுதியுள்ள பழைய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News