×

கமலின் புது திட்டம் 
அடுத்த படம் இதுதானாம்..!

 
kamal2

திரிஷ்யம் மலையாளப் படத்தின் ரீமேக்காக தமிழில் 2015ல் வெளியான பாபநாசம் படம் சக்கை போடு போட்டது. கவுதமி, கலாபவன் மணி நடித்திருந்தனர். ஒரு கொipலயை மறைக்க... எப்படியாவது தடயம் தெரியாமல் செய்து போலீஸிடம் இருந்து தப்பி தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என கமல் போராடுவது படம் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது. இப்படத்தில் படப்பிடிப்பு கதைக்கேற்ப நெல்லை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடந்தது. கதையின் போக்கானது மிக மிக யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும், நம்பக்கூடிய வகையிலும் சிறிதும் ரசனை குறையாது கொண்டு சென்று இருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோசப். 

கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தற்போது திரிஷ்யம் 2ம் வெற்றி பெற்றுள்ளது. இதில் மோகன்லால் உடன் மீனா நடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு கோர்ட் வழக்கினால் தடைபட்டுள்ளது. மேலும்,  லாக்டவுனால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் தடைபட்டுள்ளது. இந்த 2 படங்களும் தொடங்குவதற்கு முன்பே பாபநாசம் 2 படத்தை கமல்ஹாசன் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் கமல் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்தியன் 2 வழக்கு இம்மாதம் முடிவடையும் என்றும், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் கூ;ப்படுகிறது. இந்த படத்தை முடித்தவுடன் விக்ரம் படத்தில் கமல் கவனம் செலுத்த இருப்பதால் இந்த இரண்டு படங்களுக்கும் முன்பாகவே பாபநாசம் இரண்டாம் பாகம் படத்தை முடித்த கமல் திட்டமிட்டுள்ளாராம்

ஒரு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்து இந்த படத்தை முடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கமல் ஜோடியாக கவுதமிக்கு பதிலாக நடிகை மீனா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ...கமல் படத்தை இந்த வருடமாவது பார்த்துவிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். படம் வந்தால் சரிதான். 

From around the web

Trending Videos

Tamilnadu News